என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பதவி ஏற்பு விழா
நீங்கள் தேடியது "பதவி ஏற்பு விழா"
தனது பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இம்ரான்கான் அழைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Imrankhan #Modi
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு கடந்த 25-ந்தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் 342 இடங்கள் உள்ளன. இதில் 272 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறாகள். இதில் 270 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. 136 தொகுதியை பெறும் கட்சி ஆட்சி அமைக்க முடியும்.
இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ- இன்சாப் (பி.டி.ஐ.) அதிக இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக திகழ்கிறது. அந்த கட்சிக்கு 117 இடங்கள் கிடைத்துள்ளது.
முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் முஸ்லிம் லீக் 64 இடங்களிலும், பிலாவல்பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன. மீதியுள்ள 67 தொகுதிகளை இதர சிறிய கட்சிகளும், சுயேட்சைகளும் கைப்பற்றியுள்ளன.
இம்ரான்கானின் கட்சி பாகிஸ்தானில் புதிய அரசை அமைப்பது உறுதியாகி விட்டது. சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் இம்ரான்கான் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைகிறது. விரைவில் அவர் பிரதமராக பதவி ஏற்கிறார்.
4 மாகாண தேர்தல்களில் பஞ்சாப் மாகாணத்தில் இம்ரான்கான் கட்சிக்கும், நவாஸ் செரீப் கட்சிக்கும் இடையே ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவுகிறது. சிந்து மாகாண பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பலுசிஸ்தானில் அவாமி கூட்டணி கட்சியும் ஆட்சி அமைக்கின்றன. கைபர்-பக்துன்கவா மாகாணத்தில் இம்ரான்கான் கட்சி மொத்தம் உள்ள 96 தொகுதிகளில் 66 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது.
இந்த நிலையில் தனது பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இம்ரான்கான் அழைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு விஷயங்களில் அவருடன் பேசுவதற்காக பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்க அவர் முடிவு செய்து இருப்பதாகவும் அந்த தகவல் தெரிவிக்கின்றன. #Imrankhan #Modi

கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் முக ஸ்டாலின் அரசியல் நாகரீகம் கருதி கலந்து கொள்கிறார் என வைகோ கூறியுள்ளார்.#KarnatakaElections2018 #Kumaraswamy #MKStalin #Vaiko
ஆலந்தூர்:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி இனி நாடாளுமன்ற தேர்தலில் எந்த வெற்றியும் பெற முடியாது.
கர்நாடகாவில் யார் ஆட்சி அமைத்தாலும் தமிழ கத்துக்கான காவிரி நீர் பிரச்சினையில் நியாயமாக நடந்து கொள்ள மாட்டார்கள்.
ஒரு திருமண நிகழ்ச்சி, பதவி ஏற்பு நிகழ்ச்சி போன்றவற்றில் கலந்து கொள்வதையும் காவிரி நீர் பிரச்சினையையும் சம்பந்தப்படுத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.#KarnatakaElections2018 #Kumaraswamy #MKStalin #vaiko

அரசியல் நாகரீகம் கருதி முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கர்நாடக முதல்- மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு மு.க. ஸ்டாலினை அழைத்து இருக்கிறார். அவர் பங்கேற்பார் என்று நினைக்கிறேன்.
கர்நாடகாவில் யார் ஆட்சி அமைத்தாலும் தமிழ கத்துக்கான காவிரி நீர் பிரச்சினையில் நியாயமாக நடந்து கொள்ள மாட்டார்கள்.
ஒரு திருமண நிகழ்ச்சி, பதவி ஏற்பு நிகழ்ச்சி போன்றவற்றில் கலந்து கொள்வதையும் காவிரி நீர் பிரச்சினையையும் சம்பந்தப்படுத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.#KarnatakaElections2018 #Kumaraswamy #MKStalin #vaiko
130 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்றும், நாளை (செவ்வாய்க்கிழமை) டெல்லி சென்று பதவி ஏற்பு விழா தேதியை முடிவு செய்வேன் என்றும் எடியூரப்பா அதீத நம்பிக்கையுடன் கூறினார். #KarnatakaElections2018 #Yeddyurappa
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 72.13 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்று கூறுகின்றன. மேலும், பா.ஜனதா அல்லது காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றிபெறும் என்று அவை சொல்கின்றன. இந்த நிலையில் இதுபற்றி கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து தகவல்களை சேகரித்தேன். பா.ஜனதா 125 முதல் 130 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. 100-க்கு 100 சதவீதம் நாங்கள் ஆட்சியை பிடிப்போம். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
மக்களின் ஆசி எங்களுக்கு உள்ளது. அதனால் பா.ஜனதாவின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அதிகளவில் ஆர்வமுடன் வந்து வாக்களித்த மக்களுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன். கர்நாடகத்தில் ஆளும் காங்கிரசுக்கு பலமான எதிர்ப்பு அலை உள்ளது. சித்தராமையா செய்த தவறுகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். காங்கிரஸ் அதிகபட்சமாக 70 தொகுதிகளில் வெற்றி பெறும். ஜனதா தளம்(எஸ்) கட்சி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும்.
எங்கள் கட்சிக்காக தேர்தல் பணியாற்றிய தொண்டர்களுக்கு உணவு விருந்து வைக்க உள்ளேன். நாளை மறுநாள்(அதாவது நாளை செவ்வாய்க்கிழமை) டெல்லிக்கு சென்று, பதவி ஏற்பு விழா தேதி குறித்து பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். நாளையே பதவி ஏற்பு விழா தேதியை அறிவிப்பேன். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 17-ந் தேதி நடைபெறும்
நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்வேன். சித்தராமையா சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய 2 தொகுதியிலும் தோல்வி அடைவார். யாருடனும் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. கருத்துக்கணிப்புகள் பற்றி பேச விரும்பவில்லை. ஆனால் சொந்த பலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும். இது எனது கணக்கு. நான் போட்ட கணக்கு எப்போதும் தோல்வி அடைந்தது இல்லை.
பா.ஜனதா எந்தெந்த தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது பற்றி பட்டியல் வழங்கட்டுமா?. தேர்தல் முடிவு வந்த பிறகு அதை வைத்து ஒப்பிட்டு பாருங்கள், நான் கூறியது சரியா? என்பது உங்களுக்கு தெரியும். பா.ஜனதாவுக்கு கிடைத்த மக்களின் அமோக ஆதரவால், சித்தராமையா மன ரீதியாக பாதிக்கப்பட்டுவிட்டார். அதனால் இஷ்டம் போல் அவர் பேசுகிறார்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார். #KarnatakaElections2018 #Yeddyurappa

×

X